`அதை யாரும் கவனிக்கல, பெற்றோர் பதறிட்டாங்க!’ - திருமண போட்டோ குறித்து ஜனனி விளக்கம் | Sembaruthi serial actress janani speaks about marriage rumors

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/02/2019)

கடைசி தொடர்பு:15:22 (01/02/2019)

`அதை யாரும் கவனிக்கல, பெற்றோர் பதறிட்டாங்க!’ - திருமண போட்டோ குறித்து ஜனனி விளக்கம்

`அதை யாரும் கவனிக்கல, பெற்றோர் பதறிட்டாங்க!’ - திருமண போட்டோ குறித்து ஜனனி விளக்கம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் `ஐஸ்வர்யா’ கேரக்டரில் மாஸ் காட்டுபவர் ஜனனி. இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் திருமணக்கோலத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தகவல்களைக் கேட்பதற்கு அவரிடம் பேசினேன்.

ஜனனி

``திருமண வாழ்த்து சொல்ல போன் பண்ணீங்களா. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை விகடன் மூலமாவது தெளிவுபடுத்துங்கள். சமூகவலைதளத்தில் நான் வெளியிட்டு இருந்த புகைப்படம் புதிதாகக் கமிட் ஆகியிருக்கும் சீரியலுக்காக எடுக்கப்பட்டது. ஷூட்டிங் என ஹேஸ்டேக் போட்டுத்தான் புகைப்படங்களைச் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தேன். ஆனால், அதை யாரும் கவனிக்கவில்லை.

திருமண கோலத்தில் ஜனனி

திருமணக் கோலத்தில் என்னைப் பார்த்த பதற்றத்தில் பெற்றோர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் போன் பண்ணி விசாரிக்கிறார்கள். ரசிகர்கள் நிறைய பேர் திருமண  வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் அது ஷூட்டிங் எனப் பதிலளித்து இருக்கிறேன். திரைத்துறையில் இப்போதுதான் என் கரியரை தொடங்கியுள்ளேன். விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. கரியரில் சாதித்த பிறகு தான் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருமணம் நிச்சயம். ஆனால், ரசிகர்களின் வாழ்த்துகளுடன்தான் நடைபெறும்’’ என்கிறார்.