‘ரயில் பயணிகளுக்குத் தொந்தரவு!’ - காட்பாடியில் 3 திருநங்கைகளுக்கு அபராதம் | 'Riot for train passengers!' - The penalty for 3 transgenders

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (02/02/2019)

கடைசி தொடர்பு:13:30 (02/02/2019)

‘ரயில் பயணிகளுக்குத் தொந்தரவு!’ - காட்பாடியில் 3 திருநங்கைகளுக்கு அபராதம்

காட்பாடியில், ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கைகள் மூன்று பேருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.

காட்பாடி ரயில் நிலையம்

வேலூர், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த ‘பெங்களூரு எக்ஸ்பிரஸ்’ ரயிலில் திருநங்கைகள் சிலர் ஏறினர். பயணிகளிடம், அடாவடியாகப் பணம் கேட்டனர். ஒருசில பயணிகள் பணம் தர மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள், பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு, ‘பணம் கொடு’ என்று மிரட்டினர். அந்த நேரத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம், பயணிகள் புகார் தெரிவித்தனர்.

போலீஸார், வேலூர் அடுத்த ஊசூரைச் சேர்ந்த வனிதா, சுவேதா மற்றும் சந்தோஷிகா ஆகிய மூன்று திருநங்கைகளையும் பிடித்து விசாரணைக்காகப் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். பயணிகளைத் தொந்தரவு செய்த குற்றத்துக்காக, மூன்று திருநங்கைகளுக்கும் ரூ.400 வீதம், மொத்தம் 1,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். 

காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளிடம், திருநங்கைகள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வது தினமும் தொடர்கிறது. இதனை, தடுக்க வேண்டுமென ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.