``இது ராம்சார் எனக்குக் கொடுத்த வரம்!’’ - `பேரன்பு’ படத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி அமீர் | transgender anjali ameer talks about her role in peranbu

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (02/02/2019)

கடைசி தொடர்பு:14:10 (02/02/2019)

``இது ராம்சார் எனக்குக் கொடுத்த வரம்!’’ - `பேரன்பு’ படத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி அமீர்

`பேரன்பு' திரைப்படத்தில் மீரா கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் ஈர்த்தவர் அஞ்சலி அமீர். கேரளாவிலுள்ள கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் சினிமாவுக்கு புதுவரவு. அவருடைய கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் பிரதிபலித்திருக்கிறார். நேற்று படம் வெளிவந்துள்ள நிலையில் பலருடைய வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்!

அஞ்சலி அமீர்

``முதல்ல என்னை ஏத்துக்கிட்ட தமிழ் ரசிகர்களுக்கு என் நன்றிகள்! படம் பார்த்துட்டு எல்லோரும் சூப்பரா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க. திருநங்கைன்னு இந்தச் சமூகத்தால புறக்கணிக்கப்பட்ட என்னை இப்போ இந்தச் சமூகம் திருநங்கையாகவே கொண்டாடுறதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. மோகன்லால் சார் ஃபோன் பண்ணி விஷ் பண்ணாங்க. நிவின் பாலி ஃபோன் பண்ணி உங்களுடைய நடிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கு.

செமையா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாரு. தமிழில் இயக்குநர் மீரா கதிரவன் சார் ஃபோன் பண்ணி விஷ் பண்ணாங்க. வலிகளைக் கடந்து சாதிக்கும்போது ரொம்பவே பெருமையா இருக்கும். இப்போ அந்த பெருமையில்தான் இருக்கேன். இனிமே நல்ல கதைக்களத்தைத் தேர்வு செஞ்சு நடிக்கணுங்குற எண்ணம் தோன்றியிருக்கு. இது எனக்கு ராம் சார் கொடுத்த வரம்! அவருக்கு என் நன்றி’’ எனப் புன்னகைக்கிறார் அஞ்சலி அமீர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க