மத்திய அரசுப் பணியில் இருந்து உடுமலை கௌசல்யா சஸ்பெண்ட் | kausalya suspended from govt job at Wellington

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (02/02/2019)

கடைசி தொடர்பு:14:06 (02/02/2019)

மத்திய அரசுப் பணியில் இருந்து உடுமலை கௌசல்யா சஸ்பெண்ட்

ந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக்  குன்னுர் வில்லிங்டன் கன்டோன்மென்ட் பணியில் இருந்து கௌசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொசல்யா

தனியார்  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியாவையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கௌசல்யா கடுமையாக விமர்சித்தார். இந்தியாவை ஒரு நாடு என்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தன் பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து, கன்டோன்ட்மென்ட் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு கௌசல்யா உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து, சங்கரை கௌசல்யாவின் பெற்றோர் கொலை செய்தனர். சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அடுத்து கௌசல்யாவுக்கு மத்திய அரசுப் பணி வழங்கப்பட்டது. 

சங்கர் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் சக்தி என்பவரை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார். சக்தி மீது பல பெண்கள் பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து கௌசல்யாவின் இரண்டாவது திருமணமும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக் கூறி மத்திய அரசுப்பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க