`கொடநாடு கொள்ளையின்போது நடந்தது என்ன?’ - ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல்செய்ய அனுமதி கோரி, சயான் மனு | Ooty court adjourned kodanad case to Feb 8

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (02/02/2019)

கடைசி தொடர்பு:21:48 (02/02/2019)

`கொடநாடு கொள்ளையின்போது நடந்தது என்ன?’ - ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல்செய்ய அனுமதி கோரி, சயான் மனு

கொடநாடு கொள்ளை விவகாரத்தில், நடந்த சம்பவங்களை ஒப்புதல் வாக்குமூலமாகத் தாக்கல்செய்ய அனுமதிக்கக் கோரி சயான், ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில்,  கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். காெலை மற்றும் காெள்ளைச் சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையார் மனாேஜ், திபு, ஜம்சிர் அலி , சதீசன், பிஜின் குட்டி, மனோஜ், உதயகுமார், சந்தாேஷ் சமி, ஜிதின் ஜாய் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ், கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். மீதம் உள்ள குற்றவாளிகள் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இதனிடையே, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் வாளையார் மனோஜ் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தமிழக முதல்வருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசு, கடந்த 18-ம் தேதி, கொலை வழக்கில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சயான் மற்றும் மனோஜ்  ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்யக் கோரி, ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாலநந்தகுமார் மனுத்தாக்கல்செய்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரானவர்கள்

இந்த வழக்கு, கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சயான் மற்றும் வாளையார் மனோஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் குமார், எங்கள் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட சம்மன், ஒரு நாளைக்கு முன்னதாகத்தான் கிடைத்தது என்று வாதிட்டார். இதனால், ஒரே நாளில் ஆஜராக முடியவில்லை என்றதால், இருவரையும் ஜனவரி 29-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வடமலை உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 29-ம் தேதி இருவரும் நேரில் ஆஜராகினர். வழக்கறிஞர் செந்தில் குமார் பதில் அளிக்க, கூடுதல் அவகாசம் வேண்டும் என்று காேரியதையடுத்து,  இருவரையும் பிப்ரவரி 2-ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி வடமலை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளும் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. உடல்நலக் குறைவு காரணமாக உதயகுமார் ஆஜராகவில்லை. மற்றவர்கள் நேரில் ஆஜராகினர். இவர்களுக்காக வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காெலைப் பழி சுமத்திய சயான் மற்றும் வாளையார் மனாேஜ் ஆகியாேரின் ஜாமீனை ரத்துசெய்யக் காேரி தமிழக அரசு சார்பில் தாெடரப்பட்ட வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனாேஜ் தரப்பில்  வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் 7 வழக்கறிஞர்களும்,  அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்கறிஞர் நட்ராஜன் தலைமையிலான வழக்கறிஞர்களும் ஆஜராகினார்.

சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்யாமல், அவர்களை விடுவிக்கக்கோரி பிரபாகரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர் நட்ராஜன், ஜாமீனை ரத்து செய்து, இருவரையும் சிறையிலடைக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வடமலை, வழக்கை வருகின்ற 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று தீர்ப்பு வெளியாகும் என்று  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 11.30 மணி, மதியம் 3.00 மணி என இரண்டு முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் பிரபாகரன்

குறிப்பாக,  ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில், காெடநாட்டில் நடந்தது என்ன என்ற உண்மை விவரங்களை ஒப்புதல் வாக்குமூலமாகத் தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு சயான் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபாேல, இன்று நேரில் ஆஜரான மற்ற 8 பேரும் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சயான் மற்றும் வாளையார் மனாேஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சயான் மற்றும் வாளையார் மனாேஜ் ஆகிய இருவரும் உண்மையை வெளியில் சொல்லிவிடக் கூடாது எனும் நாேக்கத்திற்காக, இந்த வழக்கு தாெடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதை நீதிபதியிடம் முன்வைத்தாேம். மேலும், இந்த வழக்கில் முழுமையான உண்மை வெளிவர வேண்டுமானால், இந்த வழக்கு தாெடர்பாக தனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் ஒப்புதல் வாக்குமூலமாக அளிக்கத் தயாராக இருப்பதாக சயான் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில், தன்னுடைய குற்றங்களை ஏற்றுக்காெண்டு, ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் மீதும் வழக்குத் தாெடரப்பட வேண்டும். தான் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை, உண்மை வெளிவர வேண்டும் என்ற நாேக்கத்தாேடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்படி மனுத்தாக்கல் செய்த நபர் சாட்சிகளைக் கலைக்கிறார், தாெல்லை காெடுக்கிறார் என தமிழக அரசு இவர்கள்மீது இந்தப் பாெய் வழக்கைத் தாெடர்ந்துள்ளது. எந்த விதமான ஆதாரமாே சாட்சியமோ இல்லாமல், தமிழக அரசு இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளது. இந்த மனுவைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என வாதிட்டாேம்’ ’என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க