இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு - கௌசல்யா சஸ்பெண்ட் பின்னணி! | kausalya suspended from govt job

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:01:00 (03/02/2019)

இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு - கௌசல்யா சஸ்பெண்ட் பின்னணி!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்  பரிந்துரை படி கௌசல்யா மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெலிங்டன் கண்டோண்மென்ட் வாரிய முதன்மை அதிகாரி ஹரீஷ்வர்மா தெரிவித்துள்ளார்.

கௌசல்யா

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கண்டோண்மென்ட் வாரியத்தில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர் கெளசல்யா பணி இடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்ததால், உடுமலையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்டோண்மென்ட் வாரியத்தில் கவுசல்யா, இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அதேநேரத்தில் கடந்த டிசம்பர் மாதம் கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்பவரை மறுமணம் செய்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பி.பி.சி., தமிழ் சேனலில், கவுசல்யா, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், நான் இந்தியாவை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அந்த உணர்வும் எனக்கு வரவும் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையான வார்த்தைகள் நாட்டுப்பற்றுக்கு எதிராகவே இருந்ததால், மக்களிடையே அதிருப்தி நிலவியது. ராணுவ பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே பணியாற்றும் இவர், இவ்வாறு பேசிய நிலையில், அதிரடி நடவடிக்கையாக வெலிங்டன் கண்டோண்மென்ட் வாரியத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்வதாக வாரிய முதன்மை அதிகாரி ஹரீஷ்வர்மா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து ஹரீஷ் வர்மா கூறியதாவது, " இது தொடர்பாக வரும் திங்கள் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமைக்குள் எனது தலைமையில் விசாரணைக் குழு அமத்து விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரையின் படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க