`என் மகன் குற்றமற்றவன்; அவன் விடுதலையும் நியாயமானது' - அற்புதம்மாள் உருக்கம்! | Arputham ammal request to release his son perarivalan

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:04:44 (03/02/2019)

`என் மகன் குற்றமற்றவன்; அவன் விடுதலையும் நியாயமானது' - அற்புதம்மாள் உருக்கம்!

"என் மகன் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் முதல் சட்டவல்லுனர்கள் வரை பேசினாலும், தமிழக அமைச்சரவை ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், மனமில்லாத கவர்னர் ஒரு கையெழுத்து போட்டால் அப்பாவி பிள்ளைகள் ஏழு பேரும் விடுதலை ஆவார்கள். அதற்கான சட்டப்போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது" என்று ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார் அற்புதம்மாள்.

அற்புதம்மாள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் எழு பேர் விடுதலை குறித்து பல்வேறு அமைப்பு மற்றும் கட்சிகளிடையே கருத்துக்களை கேட்டறிந்தார் அற்புதம்மாள். ஏழு பேர் விடுதலைக்காக அடுத்த கட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என  கருத்துக்களை கேட்டறிந்தார். அற்புதம்மாள் காரைக்குடியில் பேசும் போது. ``தற்போது  28 ஆண்டுகளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர்  வழக்கு முடிவுக்கு வர வேண்டி பல போரட்டங்கள் நடத்த உத்தேசித்தோம் .உச்சநீதிமன்றம் 161-வது பிரிவை  பயன்படுத்தி மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு சொன்னது. மாநில அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் அனுப்பி 142 நாட்கள் ஆன பின்பும் ஆளுநர்  இன்னும் கையெழுத்து போடவில்லை. காலதாமத்துக்கு என்ன காரணமாக இருக்கும் என்று மக்களிடம் நிலமையை எடுத்து கூற வந்துள்ளேன் .ஜனவரி 24 முதல் கோவையில் துவங்கி இன்று காரைக்குடி வந்துள்ளேன்.  நான் அரசுக்கு ஆதரவாக தான் பேசி வருகிறேன் .  அரசு ஆளுநருக்கு நிர்பந்தம் தர வேண்டும்'' என்றார்

விழிப்புஉணர்வு

தமிழர்கள் ஏழு பேர் விடுதலை  செய்ய சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் செல்லூர் ராஜு  பேசியது பற்றி பேரறிவாளன் அம்மா அற்புதம்மாளிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய அற்புதம்மாள். "சட்ட துறை அமைச்சரும், முதல் அமைச்சரும்  தான் இதற்கு பதில் கூற வேண்டும். இந்த வர்த்தையை அமைச்சர் ஏன் இந்த பயன்படுத்தினார் என்று தெரியவில்லை. அவர் உள்பட உள்ள  அமைச்சரவை கூடிதான் ஏழு பேர் விடுதலை கூறித்து தீர்மானம் போட்டனர். இதற்க்கு பதில் முதல்வரும் சட்ட துறை அமைச்சரும் தான் பதில் தர வேண்டும் அமைச்சரிடம் பதில் கேட்டு தெரிவிக்க வேண்டும் அமைச்சர் செல்லூர் ராசு ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் கையேழுத்து போட வேண்டு என்று நினைக்கிறாரா ? வேண்டாம் என்று நினைக்கின்றார என்று பதில் தர வேண்டும் .எனக் கூறினார்.

அற்புதம்மாள்

ஜல்லிக்கட்டுக்கு மக்கள் மத்தியில் எப்படி புரட்சி ஏற்பட்டதோ அதே போல் நீங்கள் கிராம மக்களிடமும், கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் இந்த விடுதலை போராட்டம் குறித்து பேச வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அற்புதம்மாளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க