`அது பட்ஜெட் அல்ல; பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை' - தம்பிதுரை சாடல்! | Thambidurai slams bjp

வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (03/02/2019)

கடைசி தொடர்பு:09:37 (03/02/2019)

`அது பட்ஜெட் அல்ல; பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை' - தம்பிதுரை சாடல்!

ஐந்து ஆண்டுகால பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தாலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது திருவாரூரில் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை

திருவாரூர் அருகே  திருப்பாம்புரத்தில்  உள்ள ராகு கேது ஸ்தலமான சேஷபுரீஸ்வர் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வந்த துணை சபாநாயகர் தம்பிதுரை தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த தம்பிதுரை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ``பட்ஜெட் என்பது சொல்வதைக் காட்டிலும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை என்றுதான் சொல்லவேண்டும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் இதுவரை 5 முறை சமர்பிக்கப்பட்டுள்ளது. இது ஆறாவதாக இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் திட்டங்களை அறிவிக்க வேண்டும். சில அம்சங்கள் நல்ல அம்சங்கள் அறிவித்திருக்கிறார்கள்  அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் நிறைவேற்ற முடியும் நடந்து முடிந்த 5 முறை பட்ஜெட்டில் தேசிய அளவில் என்ன திட்டங்கள் செய்தார்கள். இதில் மக்கள் என்ன பயன் அடைந்தார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஜிஎஸ்டி மற்றும் பணவீக்கம் நடவடிக்கையால் மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாம் அறிவோம் அப்பொழுது விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவிக்கவில்லை.

தமிழகத்துக்கு வரக்கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. அதுதான் எங்களுடைய கருத்தாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட தமிழகத்திற்கு வரக்கூடிய 15,000 கோடி நிதியை கேட்டார். அதுவும் தரப்படவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த பட்ஜெட்டில் ஒரு சில நல்ல கருத்துக்கள் இருந்தாலும் பொதுவாக தமிழகத்தை பலவிதத்தில் பாதித்துள்ளது. உதாரணத்திற்கு என்னுடைய கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெக்ஸ்டைல்ஸ் தொழில் நல்ல நிலையில் இல்லை. அதே போன்று கொசுவலை தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய தொகுதியில் தொழில்கள்  முடக்கப்பட்டுள்ளது இந்த ஐந்து பட்ஜெட்டில் என்னுடைய தொகுதியில் கூட எந்த நலனும் செய்யப்படவில்லை வருமான வரியில் 5 லட்சம் வரிவிலக்கு தந்திருக்கிறார்கள் ஆனால் அது போதாது பொருளாதார நிலை உயரும் என்ற சொல் இருக்கும்பொழுது 8 லட்சம்  உரியவர்களுக்கு வருமான வரி விலக்கு தந்திருக்க வேண்டும் ஆனால் தரப்படவில்லை அதேபோன்று விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளார்கள்.

பட்ஜெட்

5 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்களுக்கு 6 ஆயிரம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது போதாது, அது 12 ஆயிரமாக உயர்த்தி கொடுத்திருக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஐந்து ஆண்டுகால பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தாலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் பா.ஜ.க அரசின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தி.மு.கவில் வைக்கிறாரா அல்லது யாருடன் வைக்கிறார்கள் என தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தலுக்கு அமித்ஷாவை அழைத்தார்கள், குட்கா விவகாரத்தில் பா.ஜ.க எங்கள் அ.தி.மு.க அரசு மீது குற்றம் சாட்டினார்கள் பொன்.ராதகிருஷ்ணன் ஒருமுறை, `நாகப்பாம்பு என்றாலும் அதனுடைய நச்சு மருந்துக்குப் பயன்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் அவர் யார் என்று நினைத்து சொன்னாரோ அந்த நச்சு மருந்துக்குப் பயன்படும் என்று  அது எந்த காலத்தில் பயன்படும் என்று சொன்னாரோ அதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.

தம்பிதுரை

 கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பதாக எங்களுடைய கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்கள் ஆனால் தேர்தல் தேதி இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை. வந்த பிறகு நல்லதொரு கூட்டணி உருவாக்கபடும். தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது, தமிழகத்திற்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என முதல்வர் சொல்லியிருக்கிறார் தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி வைப்போம் என முதல்வர் கூறி இருக்கிறார்கள். இதுவரை பா.ஜ.க தமிழகத்திற்கு என்ன நல்லது செய்திருக்கிறது? தமிழகத்திற்கு கஜா பாதிப்பில் தமிழகத்திற்கான நிதியை கொடுக்கவில்லை ஜிஎஸ்டி 5 கோடி நிலுவையில் உள்ளது நீட் தேர்வில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது அதே போன்று மேகதாது அணை கட்டுவதற்காக மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி தந்துள்ளது இதேபோன்று செய்தது நியாயமா ஒரு கட்சியானது தமிழகத்திற்கு என்ன நல்லது செய்துள்ளது என்பது தெளிவாக சொல்லவேண்டும்'' என் கூறி முடித்தார்