``தமிழக சுகாதாரத்துறைக்கு உலக வங்கி நிதி ஒதுக்க முடிவு!” -அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் | The World Bank has decided to allocate Rs 2645 crore to the Tamil Nadu Health Department - Minister Vijaya bhaskar

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (03/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (03/02/2019)

``தமிழக சுகாதாரத்துறைக்கு உலக வங்கி நிதி ஒதுக்க முடிவு!” -அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

தமிழக சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாடுகளால் முதல் முறையாக உலக வங்கி தமிழக சுகாதாரத்துறைக்காக ரூ.2,645கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


 புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழகம் முதன்மை  மாநிலமாக விளங்குகிறது. அதற்கேற்ப,  தமிழக அரசு ஆண்டுதோறும் அனுப்பும் கருத்துகளை பரிசீலனை செய்து, மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பாகவே தமிழக சுகாதாரத் துறைக்கு 2,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
 

இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தமிழக சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழகத்தில் சிகிச்சைகள் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் முதல் முறையாக உலக வங்கி தமிழக சுகாதாரத் துறைக்கு 2,645 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முன்வந்துள்ளது அதற்கான ஒப்பந்தம் இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில்தான் போர்க்கால அடிப்படையில் இதுவரையிலும் தமிழகத்தில் 780 -க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் போலி மருத்துவர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள்" என்றார்.