``வாஜ்பாய் அருமையான பட்ஜெட்டை அறிவித்துள்ளார்” -மேடையில் உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் | Dindigul srinivasan Controversial speech

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (03/02/2019)

கடைசி தொடர்பு:15:05 (03/02/2019)

``வாஜ்பாய் அருமையான பட்ஜெட்டை அறிவித்துள்ளார்” -மேடையில் உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சுக்குப் பெயர் பெற்றவர். இவரிடம் இருந்து சர்ச்சையை பிரிக்க முடியாது என்ற அளவுக்கு இவரின் பேச்சுகள் இருக்கும். 

திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக நிர்வாகிகளில் பெயரை மாற்றிக் கூறுவது, அமைச்சர்கள் பெயர்களை தவறாகக் கூறுவது மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதே போல தற்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் என உளறிய சர்ச்சைகளும் உண்டு.  இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் உளறியுள்ளார் அமைச்சர். 

 சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சாதனையை பட்டியலிட்டுப் பேசினார். பின்னர், “ மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்துள்ளார். மிகவும் அருமையான பட்ஜெட். ஐந்து ஏக்கர் நிலம்  வைத்துள்ள விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும்  கொத்தனார் மற்றும் சித்தாள் வேலை செய்பவருக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது மிகப் பெரும் விஷயம்” எனப் பேசியுள்ளார்.

இவரின் பேச்சு வீடியோவாக வெளியாகி சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.