‘அவர் வாஜ்பாய் போன்றவர்’ -தம்பிதுரையை புகழ்ந்த கனிமொழி | Kanimozhi praised Thambi Durai

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (04/02/2019)

கடைசி தொடர்பு:10:30 (04/02/2019)

‘அவர் வாஜ்பாய் போன்றவர்’ -தம்பிதுரையை புகழ்ந்த கனிமொழி

மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க எம்.பியுமான தம்பிதுரை கடந்த சில தினங்களாக மத்திய பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் மோடியையும் பா.ஜ.க அரசு மீது பல புகார்களைத் தெரிவித்து வருகிறார்.

கனிமொழி

இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த  தி.மு.க எம்.பி கனிமொழி, ``தவறான கட்சியில் வாஜ்பாய் எப்படி இருந்தாரோ அதேபோல் தம்பிதுரை தமிழகத்தில் அ.தி.மு.க-வில்  உள்ளார். மத்திய பா.ஜ.க பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினரும் புரிந்துகொள்வர்” எனக் கூறியுள்ளார்.

கனிமொழி

பின்னர், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் மம்மா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா பற்றிப் பேசிய அவர், ``இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடர்ந்து வன்முறைகளை  ஏவிக்கொண்டுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஒரு விவகாரம் நடக்கும்போது அதற்கு எதிராக தன் குரலைப் பதிவு செய்துள்ளார் மம்தா பானர்ஜி. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.