`குழந்தைகளுக்குப் பவுடர் நல்லதா?’ மருத்துவர் விளக்கம் | is baby powder good to kids's skin? Doctor opinion

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (04/02/2019)

கடைசி தொடர்பு:16:25 (04/02/2019)

`குழந்தைகளுக்குப் பவுடர் நல்லதா?’ மருத்துவர் விளக்கம்

குழந்தை 

குழந்தைகள் மிக அழகானவர்கள்தாம். என்றாலும், அவர்களை இன்னும் அழகூட்ட, பெற்றோர்கள் பவுடர், பொட்டு போன்றவற்றால் அலங்காரம் செய்கிறார்கள். தினசரி செய்திகளில், குழந்தைகளின் நலன் குறித்து செய்திகள் ஏராளம் வருகின்றன. சிலர் குழந்தைகளுக்கு பவுடர் பூசுவது சரி என்றும் சிலர் தேவையில்லை என்றும் சொல்கின்றனர். இதனால், பலருக்கும் குழப்பம்தான் மிஞ்சுகிறது. குழந்தைகளுக்குப் பவுடர் பூசுவது, அவர்களின் ஆரோக்கியத்துக்கு இடையூறாக மாறிவிடுமா என்று மகப்பேறு நிபுணர் டாக்டர் வாணி ஷாமிடம் பேசினேன்.  

``ஆஸ்பெஸ்டாஸ் என்ற ஒருவகையான கனிமத் துகள்கள் பவுடரில் கலப்பதால் அதைப் பயன்படுத்தும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் வரலாம். உடனடியாகப் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகள்தாம். எனவே, பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம்.  

குழந்தைகளுக்குப் பவுடர் பூசுவதற்குப் பதிலாக ஃபேஸ் க்ரீம் லோஷனைப் பயன்படுத்தலாம். இதனால், பவுடர் பூசுவதால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம். `Moisturising’ லோஷன் பயன்படுத்தினால் சருமம் மிருதுவாகக் காணப்படும். லோஷன் குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குக் குளிப்பதற்கு முன் இந்த லோசனை உடல் முழுவதும் பூசிவிட்டு ஒரு மணிநேரம் கழித்து பின்னர் குளிக்க வைத்தால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது. லோஷன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உடலில் எவ்விதமான அலர்ஜியும் ஏற்படாது. சருமமானது பளபளப்பாகவும் பொலிவுடனும் மிருதுவாகவும் காணப்படும். இதையெல்லம்விட, நம் பாட்டி, அம்மா உபயோகித்த குளியல் பொடியை உபயோகித்து குழந்தையைக் குளிக்க வைத்தால் மிகச் சிறப்பு. பவுடர் பூசாமலேயேகூட விடலாம்’’ என்கிறார்.