பெண் பத்திரிகையாளர்கள் விவகாரம்! - எஸ்.வி.சேகருக்கு தமிழிசை கொடுத்த தண்டனை தெரியுமா? | why tamilisai soundararajan not allowed s.v sekar in to party office

வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (04/02/2019)

கடைசி தொடர்பு:16:58 (04/02/2019)

பெண் பத்திரிகையாளர்கள் விவகாரம்! - எஸ்.வி.சேகருக்கு தமிழிசை கொடுத்த தண்டனை தெரியுமா?

பெண் பத்திரிகையாளர்கள்குறித்து தவறாகப் பேசி சர்ச்சைக்குள்ளானார் நடிகர் எஸ்.வி.சேகர். இந்த விவகாரத்தில் எஸ்.வி. சேகரைக் கைதுசெய்ய தனிப்படை அமைத்தும் அவரைக் கைதுசெய்ய முடியாமல் போலீஸ் தவித்தது. பெண் பத்திரிகையாளர்கள் சிலர் எஸ்.வி.சேகர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டும் பலன் இல்லை. பாரதிய ஜனதா கட்சி தரப்பிலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்த எஸ்.வி. சேகரைப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாரதிய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்துக்குள் அனுமதிப்பதில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகர்

சென்னை திருவொற்றியூரில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்திலேயே, எஸ்.வி.சேகர் வாய்விட்டு இதை ஒப்புக் கொண்டுள்ளார். 'கட்சி அலுவலகத்துக்குள் தன்னை தமிழிசை அனுமதிப்பதில்லை' என்று அவரே பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடம் புலம்பியுள்ளார்.  மேலும், கூட்டத்தில் பேசிய எஸ்.வி.சேகர், மோடி ஜல்லிக்கட்டுக் காளை போல யாருக்கும் கட்டுக்கடங்காதவர் என்றும், ராகுல் ஃபெயிலியரானதால், காங்கிரஸ் கட்சி பிரியங்காவை அரசியலுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

கமலாலயம்

எஸ்.வி. சேகரை கட்சி அலுவலகத்துக்குள் தமிழிசை அனுமதிப்பதில்லை என்கிற தகவல் ஆச்சர்யத்தை அளித்தது. இதுகுறித்து தமிழிசையைத் தொடர்புகொண்டு கேட்டோம். முதலில் பதிலளிக்க மறுத்தார். இன்னொரு விவாதத்துக்கு இடமளிக்க விரும்பவில்லை என்றார்.   'சொல்லுங்க மேடம்' என்று வலியுறுத்திக் கேட்டபோது, 'அதாம்பா... அவர் மேல யாருமே  நடவடிக்கை எடுக்கல. அப்படிங்கிற குற்றச்சாட்டை முன் வச்சாங்க. ஒரு பெண்ணாக நான் நடவடிக்கை எடுத்திருக்கேன்' என்று முடித்துக்கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க