`மிஸ் தமிழ்நாடு’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட டாப் 3 பெண்கள்! | Top three finalist for femina miss world tamilnadu audition

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (04/02/2019)

கடைசி தொடர்பு:17:12 (04/02/2019)

`மிஸ் தமிழ்நாடு’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட டாப் 3 பெண்கள்!

உலக அழகிப் போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷன் பிப்ரவரி 2-ம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் நடைபெற்றது. இதன் நடுவர்களாக ஆடை வடிவமைப்பாளர் சைதன்யராவும், `மிஸ் இந்தியா’ அனுக்கீர்த்தி வாஸும் செயல்பட்டனர். இந்த ஆடிஷன் மூலம் `மிஸ் தமிழ்நாடு’ போட்டிக்கான டாப் 3 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஷார்ட் புரொஃபைல் இதோ.

அஞ்சலி :

 ஓவல் ஷேப் ஃபேஸ், அழகான கண்கள், 5.8 அடி உயரம் போன்றவை இவருக்கான ப்ளஸ். இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்து மாடலிங்கை தனக்கான துறையாகத் தேர்வு செய்தவர். வெளிநாடு நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்பது அஞ்சலியின் கூடுதல் பலம். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி, தற்போது குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இசையில் அதிக ஆர்வம் என்பதால் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி வருகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற மாணவர்களின் கல்விக்கான உதவிகளைச் செய்வதை சமூகப் பணியாகக் கொண்டவர்.

   அஞ்சலி        

ரூபியா:

வசீகரிக்கும் கண்கள், கன்னங்களில் விழும் குழி போன்றவை ரூபியாவின் ப்ளஸ். தர்மபுரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபியா ஆர்க்கிடெக் இன்ஜினீயரிங் முடித்துள்ளார். மாடலிங்கில் களம் இறங்கிய இவர் ஃபேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களுக்கான போட்டோ ஷூட்களில் தற்போது பிஸி. பூப்பந்து விளையாட்டு இவருக்கான ஹாபி. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பது இவருடைய ஆசை.

ரூபியா

                                                                              

ஸ்ருதி:
                                                                                        
                                                                                                 
டஸ்கி ஸ்கின், தமிழர்களுக்கான பாரம்பர்ய முக அமைப்பு போன்றவை ஸ்ருதியின் ப்ளஸ். சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை. பேச்சிலர்ஸ் இன் இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ருதி, மாடலிங் ஆசை காரணமாகத் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் தன் கரியரைத் தொடங்கியுள்ளார். பதிமூன்று வயதில் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஸ்ருதிக்குப் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதுகுறித்த விழிப்பு உணர்வு பிரசாரங்களில் ஈடுபட ஆசை. 

ஸ்ருதி

இவர்களுக்கு இடையே பல்வேறுகட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் மிஸ் தமிழ்நாடாக இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படுவார்கள். `மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெறுபவர், மும்பையில் நடைபெற உள்ள `மிஸ் இந்தியா’ போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாகக் கலந்துகொள்வார்.

வாழ்த்துகள் தமிழச்சிகளே.