சாதிய தீண்டாமையைக் கண்டித்து காளையார்கோவிலில் போராட்டம்! | protest against Caste untouchability in sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 23:32 (04/02/2019)

கடைசி தொடர்பு:23:32 (04/02/2019)

சாதிய தீண்டாமையைக் கண்டித்து காளையார்கோவிலில் போராட்டம்!

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் காளையார்கோயில் பரபரப்பு ஏற்பட்டது.

காளையார்கோயில்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் கே.பரக்குளம் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சாதிவெறியைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் பேசும் போது, ``கே.பரக்குளம் கிராமத்தில் 20.01.2019 அன்று பட்டியலின மக்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை கொடுரமாக அரிவாள்களோடு ஆதிக்கசாதியினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர் மணல் கடத்தல் கொள்ளை நடத்தும் கும்பலாகும். இத்தாக்குதலில் ஈடுபடும் சமூக விரோதியான கொடிக்கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் கைது செய்ய வேண்டும். ஆதிக்க சக்திகளால் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்களை காளையார்கோயில் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. மேலும் சிவகங்கை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப மறுத்தும் அலட்சியப்படுத்திய காளையார்கோயில் மருத்துவத்துறை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காயம்பட்டவர்களை கட்டாயமாக கட்டாய டிஸ்ஜார்ஸ் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தும் கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்றார். இப்போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாநில செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க