``தமிழகத்தில் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம்.!" - பி.ஜே.பி தேசியச் செயலாளர் முரளிதர் ராவ் | We are ready to Alliance says Muralidhar Rao

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (05/02/2019)

``தமிழகத்தில் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம்.!" - பி.ஜே.பி தேசியச் செயலாளர் முரளிதர் ராவ்

``தமிழகத்தில் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்" என்று பி.ஜே.பி தேசியச் செயலாளர் முரளிதர் ராவ் கோவையில் தெரிவித்துள்ளார்.

முரளிதர் ராவ்

கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் முரளிதர் ராவ், ``தமிழக தேர்தல் களத்தை பா.ஜ.க உற்று நோக்கி வருகிறது. ஐந்து ஆண்டுக் கால ஆட்சியில் தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் எந்த ஆட்சியும் செய்ய முடியாத சாதனையை செய்து பா.ஜ.க சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் எங்களைப் போன்ற சாதனைப் பட்டியல் இல்லை.  ஐந்து ஆண்டில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளோம்.

பிப்ரவரி 26-ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் உள்ள கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக உரையாற்ற உள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி, மத்திய அரசு மூலம் பயனடைந்தவர்கள், தொண்டர்கள் வீட்டின் முன் விளக்கு ஏற்றும் கமல ஜோதி நிகழ்ச்சி நடைபெறும். மேலும், நாடு முழுவதும் உள்ள 4,100  சட்டமன்றத் தொகுதிகளில் இரு சக்கர வாகன பேரணி தொகுதி வாரியாக மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். விரைவில் கூட்டணி குறித்த விவரங்கள் விரிவாகத் தெரிவிப்போம்.

முரளிதர் ராவ்

மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஆட்சி ஜனநாயகத்துக்கு எதிரானது. மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார். மேற்கு  வங்கத்தில் பா.ஜ.க-வினர் பேரணி நடத்தக்  கூட அனுமதிக்கப்படுவதில்லை. மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற சூழல் ஏற்பட்டால்தான் புரியும். வைகோ கடந்த காலங்களில் தி.மு.க குறித்தும் காங்கிரஸ் குறித்து எவ்வாறு விமர்சித்து வந்தார் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாங்கள் எப்போது விவாதங்களுக்குத் தயாராக உள்ளோம். உரிய ஆதாரங்களுடன் எங்களுடன் விவாதிக்கத் தயாரா? என்ற கேள்வியோடு முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க