``மதுக்கடையை மூடுங்கள், அப்பதான் உங்களுக்கு ஓட்டு!"- மு.க.ஸ்டாலினிடம் குமுறிய பெண்கள் | Close Tasmac shop, request to stalin from village peoples

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:13:30 (05/02/2019)

``மதுக்கடையை மூடுங்கள், அப்பதான் உங்களுக்கு ஓட்டு!"- மு.க.ஸ்டாலினிடம் குமுறிய பெண்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி ஊராட்சியில் தி.மு.க கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தேனி கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

 

தி.மு.க-வின் ஊராட்சி சபைக் கூட்டம் கீழடியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். கிராம ஊராட்சி சபைக் கூட்டம் கீழடியில் உள்ள தென்னந்தோப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ``மக்கள் பிரச்னைகள் ஏராளமாக இருக்கிறது. எடப்பாடி அரசு கமிஷன் அரசாகவே இருக்கிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் அனாதையாக இருக்கிறார்கள். அதில், மானாமதுரையும் ஒன்று. நாடாளுமன்றம் தேர்தலோடு தமிழகத்துக்கும் தேர்தல் வரவேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள். தமிழர்களின் அடையாளம் ஒன்று கீழடி மற்றொன்று ஆதிச்சநல்லூர்.

இதையெல்லாம் மறைக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறார். மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல. வெளிநாடு சுற்றுலா செல்லும் பிரதமராகவே இருக்கிறார். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்காக எடப்பாடி ஹெலிகாப்டரில் வந்து பாதியோடு திரும்பிவிட்டார். இதற்கு முன் கீழே இருந்து ஹெலிகாப்டரை பார்த்துக் கும்பிடு போட்டவர்தான் எடப்பாடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலையையும், ஜெயலலிதா மரணத்தையும் விசாரணை நடத்துவோம்'' என்றார் ஸ்டாலின்.

கூட்டத்தில் பேசிய பெண்கள், ``பாசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமி ` முதலில் மதுக்கடையை மூடுங்கள். எனக்கு குடியிருக்க வீடு கூட வேண்டாம். நான் வாடகைக்குகூட வீடு எடுத்து தங்கிக்கொள்வேன். மதுக்கடையை மூடாவிட்டால் உங்களுக்கு நாங்கள் ஓட்டுபோட மாட்டோம் என்று பேசியதும் கூட்டத்தில் இருந்த பெண்கள் கைதட்டி அவரின் கோரிக்கைகளை மற்ற பெண்கள் வரவேற்றனர். நூறுநாள் வேலை, சாலை வசதி, ரேஷன் கடை, வேலைவாய்ப்பு, சுகாதாரம் பிரச்னைகள், குடிதண்ணீர் போன்ற பிரச்னைகளைப் பற்றி மக்கள் பேசினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க