ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதி -நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அடையாள வேலை நிறுத்தம்! | Taxi drivers one day strike in nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (05/02/2019)

கடைசி தொடர்பு:14:45 (05/02/2019)

ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதி -நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

ஓட்டுநர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டுநர்கள்

கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமல் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ். இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு, மற்றொருவரை அழைத்துச் செல்ல பாடி அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி காரை சேதப்படுத்தியுள்ளனர். பயணியின் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால், கார் ஓட்டுநர் ராஜேஷ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து அவர் தன் செல்போனில் இருந்த வீடியோ பதிவுசெய்திருந்தது வைரலானது.

இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்ததில் ஊட்டி, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று சுமார் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களை இயக்காமல், சென்னையில் இறந்த ஓட்டுநர் ராஜேஷுக்காக அஞ்சலி செலுத்தினர்.

ஊட்டியில் நடந்த அஞ்சலிக்குப் பின்பு கார் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ``ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் தங்கள் பணியை மிகுந்த சிரமப்பட்டு செய்து வருகிறோம். ஒரு சிலரால் சில மன உளைச்சலுக்கு ஆளாகி, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது, இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறோம்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க