ஜோதிட நம்பிக்கை கொண்ட காமெடி கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண்! | Harish Kalyan's next movie has been paired up with Debut director Sanjay Bharathi!

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (05/02/2019)

கடைசி தொடர்பு:15:45 (05/02/2019)

ஜோதிட நம்பிக்கை கொண்ட காமெடி கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண்!

`பியார் பிரேமா காதல்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தற்போது அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கிடையில் இவர் `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' என்ற காதலை மையப்படுத்திய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சஞ்சய் பாரதி தமிழில் மூத்த இயக்குநரான சந்தான பாரதியின் மகன் ஆவார். சஞ்சய் பாரதி இயக்குநர் விஜயிடம் உதவியாளராக இருந்தவர். இந்த ரொமான்டிக் காமெடி படம் ஒரு இளைஞனின் `ஜோதிட நம்பிக்கைகள்' பற்றிப் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஓர் இளைஞன் மீது இந்த நம்பிக்கைகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பேசுகிறது. 

ஹரிஷ் கல்யாண்

``நான் இன்றைய இளைஞர்கள் தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள கூடிய ஒரு ஹீரோவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். மிக முக்கியமாக திருமணம் ஆகாத இளம் நாயகன்தான் இதில் நடிக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். அப்போது நினைவுக்கு வந்தவர்தான் ஹரிஷ் கல்யாண். படத்தின் கதையைக் கேட்டவுடன் அவரின் உற்சாகமும், ஈடுபாடும் எனக்கு பெரிய உந்துதலை கொடுத்தது. என் முதல் படத்திலேயே இப்படியொரு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தது என் பாக்கியம். நாயகி மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறோம்" என்கிறார் சஞ்சய் பாரதி.