`ஓட்டுக்கு பணம் தருவது போல உள்ளது இந்த பட்ஜெட்!' - மத்திய அரசை விமர்சித்த கமல் | Budget Sounded Like Legitimate Version of Money for Votes says Kamal Haasan

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (05/02/2019)

`ஓட்டுக்கு பணம் தருவது போல உள்ளது இந்த பட்ஜெட்!' - மத்திய அரசை விமர்சித்த கமல்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த ஆண்டுக்கான பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாகக் கடந்த 1-ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

கமல்

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல்செய்த பட்ஜெட் தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தன் கருத்தை ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ மத்திய அரசு தாக்கல்செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை முதல்முறையாகப் பார்க்கும் விவசாயிகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகக் கவர்ச்சிகரமாகவே தோன்றும் . ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மானியம் மிகவும் குறைவானது.

``பொருளாதார வல்லுநர்கள், இந்த பட்ஜெட்டில் இருக்கும் குழப்பங்களை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். தேர்தலையொட்டி, மக்களுக்கு சட்டப்பூர்வமாக பணம் கொடுப்பது போல உள்ளது, மத்திய அரசின் இந்த பட்ஜெட்’'  என்றுள்ளார்.

‘தற்போது உள்ள அரசுக்கு வேண்டுமானால் இந்தச் சலுகை சாதகமாக இருக்கலாம். ஆனால் தேர்தல் நேரத்தில், அனைவரும் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பார்கள் எனக் கூற முடியாது. ஒரு வேளை மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், இந்தக் குழப்பமான பட்ஜெட்டைத் தொடர்வார்களா?’

அரசு, தாங்களாகவே தாக்கல்செய்துகொண்டதுதான் இந்த இடைக்கால பட்ஜெட். குறிப்பாக, தமிழகம் எதிர்கொண்டுள்ள எந்த முக்கிய பிரச்னையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.