வீட்டின் கதவைத் திறந்தவுடன் உறுமல் சத்தம்!- சிறுத்தையைப் பார்த்து அலறி ஓடிய குடும்பம் | Leopard Enters to home in Nilgris

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (05/02/2019)

கடைசி தொடர்பு:16:44 (05/02/2019)

வீட்டின் கதவைத் திறந்தவுடன் உறுமல் சத்தம்!- சிறுத்தையைப் பார்த்து அலறி ஓடிய குடும்பம்

நீலகிரி மாவட்டம், பாட்டவயல் பகுதியில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டின் கட்டில் அடியில் பதுங்கி இருந்த சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் இன்று தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது, வீட்டுக்குள்ளிருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகத்தில் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சிறுத்தை படுத்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் புகுந்த சிறுத்தை

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி கதவைப் பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பகல் நேரங்களில் வீட்டின் பின் வாசல் வழியாக வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். வனத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க