34 பள்ளிக் குழந்தைகள் திடீர் வாந்தி, மயக்கம்!- வினையான மீல் மேக்கர் | Madurai students falls sick after taking noon meal at school

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (05/02/2019)

34 பள்ளிக் குழந்தைகள் திடீர் வாந்தி, மயக்கம்!- வினையான மீல் மேக்கர்

கெட்டுப்போன மீல் மேக்கரைச் சாப்பிட்டதில் மதுரை அருகே உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள்

மதுரை அழகர்கோயில் அருகே வெள்ளியங்குன்றம் கிராமம் உள்ளது. இங்கு அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்நிலையில். மதிய உணவுக்காக இன்று பள்ளியில் மீல் மேக்கர் சமைக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன மீல் மேக்கரைச் சரியாகப் பார்க்காமல் சமைத்துள்ளனர். இதைப் பள்ளியில் உள்ள குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் வாந்தி, மயக்கம் என்று திணற ஆரம்பித்தனர். சமைத்த மீல் மேக்கரை எடுத்து பார்க்கையில் அது கெட்டுப்போன நிலையில் புழு அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மீல் மேக்கர்

உடனடியாக பாதிக்கப்பட்ட 34  குழந்தைகளை கள்ளந்தரி ஆரம்பச் சுகாதார நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அதிக அளவு பாதிக்கப்பட்ட 19 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விசாரணை செய்துவருகின்றனர்.