16 தேர்தல்கள்; 2 பேர் மட்டுமே போட்டி! - மதுரையில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்காத அரசியல் கட்சிகள் | Only two woman candidates competed in Madurai lok sabha constituency

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (05/02/2019)

16 தேர்தல்கள்; 2 பேர் மட்டுமே போட்டி! - மதுரையில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்காத அரசியல் கட்சிகள்

மதுரை

முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இருந்து மதுரை தொகுதிக்கு இதுவரை 16 தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில், மொத்தமாக 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்தான் போட்டியிட்டிருப்பது விசித்திரம். 

1996 தேர்தலில் ஒருவரும், 1998 தேர்தலில் இன்னொருவரும் போட்டியிட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே சுயேச்சைகள். கட்சி சார்பாக இதுவரை பெண் வேட்பாளர்கள் யாரும் இங்கு களமிறங்கியதில்லை. மதுரை தொகுதியின் முதல் பெண் வேட்பாளர் என்கிற பெருமையைப் பெறுகிறார் கீதா. 1996 தேர்தலில் இவர் போட்டியிட்டார். கீதாவுக்கு முன்பு வரை மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் எந்தப் பெண்ணும் போட்டியிடவில்லை. 

1996 மதுரை தேர்தல் நிலவரம்:
மொத்த வாக்காளர்கள் 1,21,97,000
பதிவானவை 7,47,383 
மொத்த வேட்பாளர்கள் 38 பேர்

இந்தத் தேர்தலில், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ராம்பாபு வெற்றிபெற்றார். 2-வது இடத்தை சுப்பிரமணியன் சுவாமி பிடித்தார். கீதா, வெறும் 263 வாக்குகள்தான் வாங்கி 28-வது இடத்தைப் பிடித்தார். 

கீதாவுக்குப் பிறகு, 1998 தேர்தலில்தான் ரஜினி திருமதி என்ற பெண் சுயேச்சையாகப் போட்டியிட்டார். 

1998 மதுரை தேர்தல் நிலவரம்:
மொத்த வாக்காளர்கள் 13,49,265 
பதிவானவை 6,76,204  
மொத்த வேட்பாளர்கள் 11 பேர்

இந்தத் தேர்தலில், ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி வெற்றிபெற்றார். ரஜினி திருமதிக்கு ஐந்தாவது இடம்தான் கிடைத்தது. அவர் வாங்கிய வாக்குகள் 5,485 மட்டுமே. அதன்பின் நடந்த தேர்தல்களில், எந்தப் பெண் வேட்பாளரும் மதுரை தொகுதியில் போட்டியிடவில்லை,

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க