`40 தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும்!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | ADMK will win all 40 seats, says MR VIjayabhaskar

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (05/02/2019)

கடைசி தொடர்பு:21:15 (05/02/2019)

`40 தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும்!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

`வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என்று கரூரில் தமிழகப் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கோழி வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ்,  சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அசில் நாட்டுக்கோழி குஞ்சுகளை,  1,600 பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தொடங்கிவைத்தார். கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடையும் வகையில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் ஊரகப் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், பிறந்து 4 வாரங்களே ஆன அசல் நாட்டுக்கோழி குஞ்சு ரூபாய் 3,750 மதிப்புள்ள, 50 குஞ்சுகள் வீதம் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் உள்ள பயனாளிகள் மொத்தம் 1,600 பேருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்று முதல்கட்டமாக 400 பயனாளிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கி, திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

நாட்டுக்கோழி வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இந்தக் குஞ்சுகளைப் பாதுகாப்பாக வளர்க்க ரூபாய் 2,500 மதிப்பில் கூண்டுகள் வழங்கப்படுகிறது. நாட்டுக்கோழிக் குஞ்சுகளைப் பெறும் பயனாளிகளுக்கு, ஒருநாள் கோழி வளர்ப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும்" என்றார்.