மீஞ்சூர் அருகே காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து குடோன் கண்டுபிடிப்பு! - ரூ.5 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல் | Rupees 5 crores worth expired pesticides captured near Minjur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (05/02/2019)

மீஞ்சூர் அருகே காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து குடோன் கண்டுபிடிப்பு! - ரூ.5 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்

மீஞ்சூர் அருகே நாலூரில் காலாவதியான பூச்சிக் கொல்லி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக மீஞ்சூர் போலீஸார் இருவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

பூச்சிக்கொல்லி மருந்துகள்

திருவள்ளுர் மாவட்டத்தில் நெற்பயிர்களுக்குத் தெளிக்கும் தரமற்ற காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் உரம் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனை வாங்கிப் பயன்படுத்துவதால் நெற்பயிர், வேர்க்கடலை, வாழை போன்ற பயிர்கள் கருகிபயனற்று போவதோடு மண் வளமும், நிலத்தடி நீரும், மாசடைந்து விட்டதாக விவசாயிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி, அதன் பேரில் மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான தனிப் படையினர் விசாரணை நடத்தினர். 

பூச்சிக் கொல்லி மருந்துகள்

இதில், மீஞ்சூர் அடுத்த நல்லூர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் உரங்கள் ஆகியவை பதுக்கிவைத்து, புதிதாக அதன்மீது லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவது தெரியவந்தது. இதனையடுத்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாச்சியர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் அங்கு வருவாய் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அங்கு விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர், கிடங்கின் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங் மற்றும் காவலாளி ரஹீமின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கிடங்கின் உரிமையாளர் ராகுல் சஞ்சயை போலீஸார் தேடிவருகின்றனர்.