சென்னையை அடுத்து கடலூரில்தான் அதிக விபத்து - விழிப்பு உணர்வு நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்! | students conduct the stage show for Road Safety Awarnes in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:35 (06/02/2019)

சென்னையை அடுத்து கடலூரில்தான் அதிக விபத்து - விழிப்பு உணர்வு நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்!

கடலூரில் அரசுப் பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு நாடகம் நடந்து. இதில் கடலூர் எஸ்.பி. சரவணன் கலந்துகொண்டார். சாலைப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற விழிப்பு உணர்வை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா 4-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது. நேற்று அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர்  அன்புசெல்வன்  திறந்து வைத்து ஒட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்.

விழிப்புஉணர்வு நாடகம்

தொடர்ந்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே காடாம்புலியூர் அருகே உள்ள கருக்கை அரசுப் பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு நாடகம் நடந்தது. எஸ்.பி சரவணன், ஏ.டி.எஸ்.பி வேதரத்தினம், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முக்கண்ணன், கடலூர் புதுநகர்  இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

விழிப்புஉணர்வு

இதைதொடர்ந்து பொதுமக்கள், இளைஞர்கள், போலீஸார் கலந்துகொண்ட சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியில் எஸ்.பி சரவணன் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார். இதன் பின்னர் கடலூர் மஞ்சைக் குப்பம் மைதானத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எஸ்பி சரவணன் முன்னிலையில் சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் பேசிய எஸ்.பி சரவணன் சென்னையை அடுத்து கடலூர் மாவட்டத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க விழிப்புடன் இருந்து சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.