தொடர் குற்றங்கள் - கள்ளக்கடத்தலின் தலைநகராக மாறுகிறதா காரைக்குடி? | four persons arrested for distributing fake notes in karaikudi

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:37 (06/02/2019)

தொடர் குற்றங்கள் - கள்ளக்கடத்தலின் தலைநகராக மாறுகிறதா காரைக்குடி?

கள்ளக்கடத்தலின் தலைநகரமாக காரைக்குடி இருக்கிறது. கடத்தல் தங்கம், ஹவாலா பணம், கள்ளநோட்டுகள் பறிமுதல் என அவ்வப்போது காரைக்குடி கலகலத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தற்போது கள்ளநோட்டுக் கும்பலை எஸ்.பி டீம் பிடித்திருக்கிறது.

காவல்நிலையம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதிகளில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட குன்றக்குடி சிவரஞ்சனி மற்றும்  சின்னையா மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சேதுபதி, விராலிமலை கிட்டு என்ற கிருஷ்ணன் உட்பட நான்கு பேரை காரைக்குடி வடக்கு காவல்நிலைய போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 22 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், 94,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்திருக்கிறது போலீஸ். கைது செய்யப்பட்டவர்கள்மீது  வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ள நோட்டுக்கள்

எஸ்.பி தனிப்படை போலீஸார் மான்ஜின் டூவீலர் ஒர்க்‌ஷாப் போனபோது அந்த மெக்கானிக் 2,000 ரூபாய் நோட்டைக் காண்பித்திருக்கிறார். அந்த போலீஸார் ரூபாய் நோட்டைப் பார்த்ததும் போலி என்று சொன்னதும் அந்தப் பணத்தை யார் கொடுத்தாரோ அவரைத் தேடி போலீஸ் வீட்டுக்கே சென்றது. இப்படி அந்தக் கும்பலின் நெட்வொர்க்கை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. கடத்தல் தங்கம், ஹவாலா பணம், கள்ளநோட்டுகள் பறிமுதல் எனக் காரைக்குடியில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதுடன், கள்ளக்கடத்தலின் தலைநகரமாக காரைக்குடி மாறிவருவதாக மக்கள் பேசத்தொடங்கியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க