சாராய வியாபாரி, கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது! | In Cuddalore Two Young people Arrested

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (06/02/2019)

கடைசி தொடர்பு:11:59 (06/02/2019)

சாராய வியாபாரி, கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது!

போலீஸார் கடந்த மாதம் 25ம் தேதி வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்பொழுது பனையாத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் சுரேஷ்(37) என்பவர் இரு சக்கர வானத்தில் வேகமாக வந்துள்ளார். அவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அவர் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது

கடலூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீஸார் கடந்த மாதம் 25-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பனையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் சுரேஷ் (37) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். அவரை போலீஸார் நிறுத்தி சோதனை செய்ததில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது விருத்தாசலம் மது விலக்கு காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன.

சாராய வியாபாரி

இதேபோல், கடலூர் சுத்துகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன். இவர் கடந்த மாதம் 20-ம் தேதி அதே பகுதியில் செல்லியம்மன் கோயில் அருகில் நின்றபோது அதே ஊரைச் சேர்ந்த குணா என்கிற குணாளன் முன் விரோதம் காரணமாக அவரை வழி மறித்து அசிங்கமாகத் திட்டி,  கத்தியால் வயிற்றில் குத்திக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரசன் மனைவி விஜயராணி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து குணாவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்

இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இவர்கள் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு கடலூர்  எஸ். பி. சரவணன் பரிந்துரையின் பேரில் சுரேஷ் மற்றும் குணாளனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது.