``தாடி பாலாஜி நிஜத்திலும் அப்படித்தானா?’’ - வியப்பு அகலாமல் விவரிக்கும் செய்தித் தொகுப்பாளர் | 'True face of dhadi balaji '- this is tv news reader experience

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (06/02/2019)

கடைசி தொடர்பு:11:35 (06/02/2019)

``தாடி பாலாஜி நிஜத்திலும் அப்படித்தானா?’’ - வியப்பு அகலாமல் விவரிக்கும் செய்தித் தொகுப்பாளர்

னியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றுபவர் காயத்ரி கிஷோர். இரு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சொந்த ஊருக்குக் குடும்பத்துடன்  காரில் கிளம்பியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். மீண்டும் புறப்பட்டபோது கார் ஸ்டார்ட் ஆகவில்லை. என்ன செய்து பார்த்தும் பலன் இல்லை. இந்தச் சமயத்தில் இவர்களின் கார் அருகே மற்றொரு கார் வந்து நின்றுள்ளது. காரில் இருந்து ஓட்டுநர் மட்டும் இறங்கி ஹோட்டலில் டீ குடித்தார். இவர்கள் அந்த ஓட்டுநரிடத்தில் சென்று காரை ஸ்டாட் செய்ய உதவி கேட்டுள்ளனர். அவரும் முயன்று பார்த்துக்கொண்டிருந்தார். 

தாடி பாலாஜி

அப்போது, காரின் முன் இருக்கையில் இருந்தவர் ஓட்டுநரை அழைத்துள்ளார். மீண்டும் புறப்படுவதற்காக அழைத்திருப்பார் என்று காயத்ரி கிஷோர் நினைத்துள்ளார். ஆனால், முன்னிருக்கையில் இருந்தவர் ஓட்டுநரை அழைத்து, என்ன பிரச்னை என்று கேட்டுள்ளார். ஓட்டுநரும் அவரிடத்தில் கார் பழுதான விவரத்தைக் கூறியுள்ளார். `அப்படியா நிதானமாகப் பார்த்துக் கொடுத்துவிட்டு வா... நான் வெயிட் பண்றேன்’ என்று  தன் ஓட்டுநரிடத்தில் முன் இருக்கையில் இருந்தவர் கூறியுள்ளார். 

மீண்டும் காயத்ரி கிஷோரின் காரை நோக்கி அந்த ஓட்டுநர் வந்தார். அவரிடத்தில் `உங்கள் ஓனர் அவசரப்படுகிறாரோ’ எனக்  காயத்ரி கேட்டுள்ளார். இல்லை... நிதானமாகப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருமாறு’ கூறினார் என்று ஓட்டுநர் பதிலளித்தார். `உங்கள் காரில் இருப்பவர் யார்’ எனக் காயத்ரி கேட்க, `நம்ம விஜய் டிவி தாடி பாலாஜிணா’ என்று அவரிடத்தில் இருந்து பதில் வந்துள்ளது. 

இதைக் கேட்டதும் காயத்ரி கிஷோருக்கு வியப்பு தாங்கவில்லை. தொடர்ந்து, கார் மெக்கானிக்குக்குத் தகவல் கொடுத்துவிட்டு அந்த ஓட்டுநர் தாடி பாலாஜியுடன் மீண்டும் புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட கார் யூடர்ன் அடித்து  பழுதான கார் அருகே வந்து நின்றது. காரின் கண்ணாடியை இறக்கிய தாடி பாலாஜி, `என்ன பிரச்னை வேறு ஏதாவது ஹெல்ப் வேணுமா’ என்று பரிவுடன் கேட்டுள்ளார். நெகிழ்ந்துபோன காயத்ரி கிஷோர், `வேண்டாம் சார்... நாங்கள் மெக்கானிக்குக்குத் தகவல் கொடுத்துவிட்டோம். உங்களுக்கு ரொம்ப நன்றி’ என்று கூறியுள்ளார்.

காயத்ரி

நெகடிவான செய்திகளுக்கிடையே, தாடி பாலாஜியின் பாசிடிவான முகம் தெரியவந்தது குறித்து காயத்ரி கிஷோரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. ஆனாலும், சக மனிதர்கள் பிரச்னையில் இருக்கும்போது உதவி செய்யணும்னு நினைக்கிறது பெரிய விஷயமா எனக்குத் தோனுது. பிக் பாஸ்லகூட ரொம்ப லேட்டாத்தான் அவரைப் பற்றிப் புரிஞ்சுக்கிட்டாங்க. பிக் பாஸ்ல எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா அக்கறையா இருப்பார். தன்னுடைய குடும்பத்தோடு சேர அவர் எடுத்த முயற்சிகளும் நெகிழ்ச்சியானது. திரையில்தான் அப்படி நடிக்கிறாரோ என்று நான்கூட நினைத்தது உண்டு. இப்போது நிஜத்திலும் அவர் அப்படித்தான் எனத் தெரிந்தது’’ என்ற காயத்திரியிடம் இன்னும் வியப்பு அகலவில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க