``ஆஞ்சநேயர் கோயிலில் முடிந்தால் லிப்ட் அமைக்கலாம்!"- இந்து சமய அறநிலையத்துறை தகவல் | Namakkal anjaneyar temple issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (06/02/2019)

கடைசி தொடர்பு:13:00 (06/02/2019)

``ஆஞ்சநேயர் கோயிலில் முடிந்தால் லிப்ட் அமைக்கலாம்!"- இந்து சமய அறநிலையத்துறை தகவல்

நாமக்கல் ஆஞ்சநேயர்  கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையர் வரதராஜன் தலைமையில் தொழில்நுட்பக் குழுவினர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். 

நாமக்கல் ஆஞ்சநேயர்  கோவில்

கடந்த வாரம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்யும்போது தவறுதலாக கீழே விழுந்து இறந்தார் அர்ச்சகர் வெங்கடேசன். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையர் வரதராஜன் தலைமையில் தொழில்நுட்பக் குழுவினர் கோயிலின் பாதுகாப்பு அம்சங்கள்  குறித்து ஆய்வு செய்தனர். 

இது பற்றி நம்மிடம் பேசிய கோயில் நிர்வாகத்தினர், ``அர்ச்சகர் வெங்கடேசன் நின்று பணியாற்றிய 8 அடி உயரத்தில் உள்ள மரப்பலகையை பார்வையிட்டனர். தொடர்ந்து அர்ச்சகர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க முடியுமா என்ற கோணத்திலும் ஆய்வுசெய்தனர். ஆனால், கோயில் உள் பிரகாரத்தில் லிப்ட் அமைத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருள்கள் விழும்போது இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்ற முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து அர்ச்சகர்கள் நின்று பணி செய்யும் பலகையின் அகலத்தையும், நீளத்தையும் அதிகரிக்கவும், பலகையின் முன்புறம் இரும்புக் கைப்பிடி அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணிகள் செய்து முடிக்கும் வரை, ஆஞ்சநேயர் சுவாமியின் சிலைக்கு அதிகமாக பூ மாலைகள் அணிவிக்கக் கூடாது. பக்தர்கள் தரும் பூ மாலைகள்  பெரும்பாலும் சுவாமியின் பாதத்தில் வைக்க வேண்டும். மேலும், வெண்ணைக் காப்பு அலங்காரம் முடிந்தவுடன், அதைச் சுத்தமாக அகற்றிட வேண்டும். குறிப்பாக அர்ச்சகர்கள் நின்று பணி செய்யும் பலகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என அர்ச்சகர்களுக்கு அறிவுரை கூறிச் சென்றுள்ளனர் இந்து சமய அறநிலைத்துறையின் அதிகாரிகள்" என்று தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க