டெல்லியில் கனிமொழியை திடீரென சந்தித்த அ.தி.மு.க நிர்வாகிகள்! - என்ன காரணம்? | DMK executives met with MP Kanimozhi, Subramanian in delhi

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (06/02/2019)

கடைசி தொடர்பு:14:29 (06/02/2019)

டெல்லியில் கனிமொழியை திடீரென சந்தித்த அ.தி.மு.க நிர்வாகிகள்! - என்ன காரணம்?

தேனி எம்.பி தொகுதியில் போட்டியிடுவதற்காக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ரவி என்கிற ரவீந்திரநாத்குமார் விருப்ப மனு பெற்றிருக்கும் சூழலில், தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் டெல்லிக்கு விசிட் அடித்திருக்கிறார்கள்.

கனிமொழியுடன் அதிமுக நிர்வாகி

தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளான அபுதாகிர், ஜெய்லானி மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உட்பட அ.தி.மு.கவினர் டெல்லி சென்று எம்.பி கனிமொழி மற்றும் சுப்பிரமணியசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் காரசாரமாக சென்றுகொண்டிருக்கும் சூழலில், சுப்பிரமணிய சாமியை அ.தி.மு.க நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழியை சந்தித்த அதிமுக நிர்வாகி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ``இது அரசியல் காரணங்களுக்கான சந்திப்போ, ஓ.பி.எஸ் மகன் ரவியை எம்.பி தேர்தலில் நிற்க வைப்பது தொடர்பான சந்திப்போ இல்லை. மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது. வேறு ஒன்றும் இல்லை” என்றார். எம்.பி கனிமொழி மற்றும் சுப்பிரமணியசாமி உடனான அ.தி.மு.க நிர்வாகிகளின் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.