திருச்சியில் பிரபல ஜவுளிக்கடைகளில் தொடரும் ஐ.டி ரெய்டு! | Income tax officers raid at trichy Ahmed brothers textile showroom

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:05 (06/02/2019)

திருச்சியில் பிரபல ஜவுளிக்கடைகளில் தொடரும் ஐ.டி ரெய்டு!

வருமானவரித்துறை அதிகாரிகள் திருச்சியில் உள்ள வணிக நிறுவனங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்துவதால் பரபரப்பு நிலவுகிறது.
 
ஜவுளிக்கடையில் வருமானவரித் துறை சோதனை
 
கடந்த மாதம் திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள். இரண்டு நாள்கள் சோதனை நடத்தியதுடன் அந்த நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததாகவும், அதற்கான ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த நிலையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தனியார் ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. நான்கு தளங்கள் கொண்டுள்ள இந்தக் கடையில் சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்குமான ஜவுளி ரகங்கள் ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
ஜவுளிக்கடை
 
இந்த ஜவுளி நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக நுழைந்ததுடன் சோதனை நடத்தினர். தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று காலை ஜவுளி கடைக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்தக் கடையில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பின்பக்க கதவு வழியாக வெளியே அனுப்பப்பட்டு கணக்குப் புத்தகங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையான சோதனைக்குப் பின்னரே இந்த ஜவுளி நிறுவனம் எந்த அளவுக்கு வரிஏய்ப்பு செய்துள்ளது என்பது தெரியவரும். திருச்சியில் தொடரும் வருமான வரித்துறை அதிரடி சோதனைகளால் திருச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க