அரசு விழாவில் அ.தி.மு.க சேனலுக்கு புரொமோஷன் - கோவை சர்ச்சை! | CM function controversy in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (06/02/2019)

கடைசி தொடர்பு:19:05 (06/02/2019)

அரசு விழாவில் அ.தி.மு.க சேனலுக்கு புரொமோஷன் - கோவை சர்ச்சை!

முதல்வர் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வாகனத்தில், அ.தி.மு.க-வின் நியூஸ் ஜெ சேனலுக்கு புரொமோஷன் செய்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வாகனத்தில், அ.தி.மு.க-வின் நியூஸ் ஜெ சேனலுக்கு புரொமோஷன் செய்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாராயணசாமி நாயுடு

விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணி மண்டபத் திறப்பு விழா, கோவை வையம்பாளையம் பகுதியில் இன்று நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மர்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்துகொண்டனர்.

இதற்காக, இன்று காலை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, வழிநெடுகிலும் பேனர், கட் அவுட்கள் வைத்து வரவேற்றனர் அ.தி.மு.க-வினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு பிரமாண்ட கட்- அவுட்கள் வைத்திருந்தனர். சில இடங்களில் கட்டடங்களை விட பல அடி உயரத்துக்கு கட்-அவுட்கள் வைத்திருந்தனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் வீட்டில் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்தார். கோதாவரி, காவிரி ஆறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளையும், தங்களது ஆட்சியில் செய்த சாதனைகளையும் அடுக்கிக்கொண்டிருந்தார்.

அதிமுக

இதெல்லாம் ஒருபுறம் நடக்க, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வாகனத் திரையில் அ.தி.மு.க-வின் சேனலான நியூஸ் ஜெ ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இதுவரை, அரசின் திட்டங்களை ஒளிபரப்புவதற்காகப் பயன்படுத்திவந்த சேலை தற்போது, தங்களது கட்சி சேனலுக்கு புரொமோஷன் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.