பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!  - கரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி | 7 years imprisonment for sex offenders

வெளியிடப்பட்ட நேரம்: 01:39 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:09 (07/02/2019)

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!  - கரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி

கரூர் மகளிர் நீதிமன்றம் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கரூர் கோர்ட்

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பாலியல் வழக்கில் இன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கக் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கரூர் மாவட்டம் மேலமாயனூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி (46). கூலித்தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, அப்பகுதியில் உள்ள முள்காட்டில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் மாயனூர் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். 

குற்றவாளி முத்துசாமி

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், நீதிபதி அளித்த தீர்ப்பில், சிறுமியைக் கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து தடுக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து இரண்டைrயும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து, குற்றவாளி முத்துசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.