``வெட்டியாக இருப்பதுதான் அவமானம், துப்புரவுத் தொழில் அல்ல!'' விண்ணப்பித்த இன்ஜினீயர் சொல்கிறார் | 4,600 Applications For 14 Sweepers' Job In Tamil Nadu Assembly

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (07/02/2019)

``வெட்டியாக இருப்பதுதான் அவமானம், துப்புரவுத் தொழில் அல்ல!'' விண்ணப்பித்த இன்ஜினீயர் சொல்கிறார்

த்தனை தனியார் வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அரசு வேலை என்றால் அதற்குத் தனி மவுசு என்பதற்கு உதாரணமாகத் தமிழகத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னையில் உள்ள  தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. வெறும் 14 பணியிடங்கள்தான். அதற்கு விண்ணப்பித்தவர்கள் 4,607 பேர். 

துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த தனசிங்

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினீயரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சியானத் தகவல். இதில்,  677 பேரின்  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளம் ரூ.15,700 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 பணியிடங்களில் 4 பொதுபிரிவினருக்கு, 4 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 3 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 2 பட்டியலினத்தவருக்கு, ஒரு பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு எந்தக் கல்வி தகுதியும் இல்லை. ஆனால், உடல் தகுதி தேவை. 

இந்த வேலைக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த தனசிங் என்பவரும் விண்ணப்பித்துள்ளார். இவர் இன்ஜினீயரிங் படித்தவர். இது குறித்து தனசிங் கூறுகையில், ``கூலி வேலை பார்த்துக்கொண்டேதான் இன்ஜினீயரிங் படித்தேன். இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால், துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்தேன். வெட்டியாக இருப்பதுதான் அவமானம். துப்புரவுப் பணி அல்ல'' என்கிறார்.

துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த தனசிங்கிடம் ஸ்மார்ட் போன்கூட இல்லை. சாதாரண செல்போன்தான் பயன்படுத்துகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க