`மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா?' - நடிகை சீதா | actress seetha talks about her daughter wedding

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (07/02/2019)

`மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா?' - நடிகை சீதா

சீதா மகள் திருமணம்

டிகை சீதாவின் வீட்டில் மீண்டும் ஒரு திருமணக் கொண்டாட்டம். மூத்த மகள் அபிநயாவின் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக உள்ளவர், மகளின் திருமண நிகழ்வு குறித்துப் பேசுகிறார். 

சீதா மகள் அபிநயா

``கடந்த ஆண்டு என் இரண்டாவது பொண்ணு கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு, என் மூத்த பொண்ணு அபிநயாவுக்கு தீவிரமா வரம் தேடிட்டு இருந்தோம். மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், சென்னையில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். அவர், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன்). மாப்பிள்ளை வீட்டார், எங்களுக்குத் தூரத்து சொந்தம்தான். ஜாதகம் உட்பட எல்லா வகையிலயும் இரு குடும்பத்தினருக்கும் பிடிச்சுப்போக திருமணத்துக்கு முடிவு பண்ணினோம். கடந்த ஜனவரி மாதம் சோழா ஹோட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்துச்சு. அதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைச்சிருந்தோம்.

அபிநயா பார்த்திபன்

அடுத்த மாதம் மார்ச் 24-ம் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்கப்போகுது. பொண்ணு என்னைவிட்டு தூரமா போயிடக் கூடாதுனுதான், வெளிநாட்டு வரன்களைத் தவிர்த்தேன். இப்போ சென்னையிலேயே வரன் அமைந்ததுல எனக்கும் மகளுக்கும் ரொம்ப சந்தோஷம். சினிமா வட்டாரத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துட்டு இருக்கிறோம். கல்யாண வேலைகளால் எங்க வீடு சந்தோஷத்துடன் களைகட்டியுள்ளது" என்று புன்னகைக்கிறார் சீதா.