புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர்! மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் | parents donated schooling equipments in Pudukkottai government school

வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:12 (08/02/2019)

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர்! மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்

புதுக்கோட்டை அருகே ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து கல்விச்சீர் வழங்கி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

புதுக்கோட்டை அருகே ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, தொடுதிரை போர்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிப்பறை, மாணவர்கள் அமர பெஞ்ச் வசதி, நாற்காலிகள், கணினி வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் முன் மாதிரி அரசுப் பள்ளியாக திகழ்ந்து வருகிறது. இதில், உள்ள பல பொருள்கள் பெற்றோர்கள், கிராம மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது தான் கூடுதல் சிறப்பம்சம். இந்த நிலையில், தான் தற்போது கிராம மக்கள், மேலும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு குடங்கள், நாற்காலிகள் உள்ளிட்ட ஏராளமான உபகரணங்களைப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சீராக பள்ளிக்குக் கொண்டு வந்தனர்.

சீர் கொண்டு வந்தவர்களை தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மாணவர்கள் வரிசையாக நின்று கைகூப்பி வரவேற்றனர். அனைவரையும் உபசரித்து அன்புடன் வழி அனுப்பி வைத்தனர். ஆவணத்தாங்கோட்டை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வாகனம் வாங்குவதற்காக 30,000 நிதி கொடுத்துள்ளனர். விரைவில் பள்ளிக்கு வாகனம் வாங்கி விடுவோம் என்று உற்சாகத்துடன் கூறுகின்றனர் ஆசிரியர்கள்.