அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை இடம்? | BJP will contest 12 seats in Tamilnadu in coming parliament elections; seat sharing finalised?

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (08/02/2019)

கடைசி தொடர்பு:16:07 (08/02/2019)

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை இடம்?

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில், பா.ஜ.க.வுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பி ஜே பி - அ.தி.மு.க கூட்டணி - மோடி - எடப்பாடி

மேலும், எந்தெந்தத் தொகுதிகள் என்பதோடு, அந்தத் தொகுதிகளில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் பா.ஜ.க. மேலிடம் இறுதி செய்துள்ளது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதே கருத்தை அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேறு சில நிர்வாகிகளும் கூறிவருகிறார்கள். 

எட்ப்பாடி

இந்தச் சூழலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அ.தி.மு.க, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு நிறைவடைந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. 12 தொகுதிகளிலும், தே.மு.தி.க 4 தொகுதிகளிலும், பா.ம.க 4 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதியில் ஒன்றை பா.ம.க-வுக்கு விட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அல்லது மாநிலங்களவை உறுப்பினராக பா.ம.க-வைச் சேர்ந்த ஒருவரை அ.தி.மு.க. தேர்வு செய்யவும் இறுதிசெய்யப்பட்டு, கூட்டணி குறித்த முடிவுகள் இறுதிசெய்யப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே அ.தி.மு.க சார்பிலும், பா.ஜ.க. சார்பிலும் கூட்டணி குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் 12 தொகுதிகளில் இந்தக் கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் கொங்குநாடு மக்கள் தேசியக் கழகம், புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம். அவ்வாறு ஒதுக்கப்படும்பட்சத்தில், அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடவே வாய்ப்பு அதிகம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க