கொடநாடு கொள்ளை வழக்கில் மனோஜ், சயானுக்கு ஜாமீன் ரத்து; 4 பேருக்கு பிடிவாரன்ட்! | Bail cancelled for Sayan and others, Court issues Arrest Warrant

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (08/02/2019)

கடைசி தொடர்பு:17:22 (08/02/2019)

கொடநாடு கொள்ளை வழக்கில் மனோஜ், சயானுக்கு ஜாமீன் ரத்து; 4 பேருக்கு பிடிவாரன்ட்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய ஊட்டி அமர்வு நீதிமன்றம், 4 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

ஊட்டி நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 11 பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கணகராஜ் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் 10 பேர் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் வழக்கின் முதல் இரண்டு குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப் பழி சுமத்தினர். இதனால் தமிழக அரசு சார்பில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொடநாடு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்

இரு வழக்குகளும் இன்று ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொடநாடு கொலை வழக்கில் சந்தோஷ் சாமி, ஜிதின் ஜாய், உதயகுமார், மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன் என 6 பேர் மட்டுமே ஆஜராகினர். அதே நேரத்தில் சயான், வாளையார் மனோஜ்  ஆகியோரின்  ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இருவரும் ஆஜராகவில்லை.

அதேபோல கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகியோர் ஆஜராகாததால் நீதிபதி வடமலை, ``ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் விசாரணைக்கு இதுநாள் வரை 10 பேரும் ஒரே சமயத்தில் ஆஜரானதில்லை எனக் கூறி வழக்கை மதியம் 2.30 ஒத்திவைத்தார். பின்னர் 3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்ட நீதிபதி வடமலை, ஆஜராகாத 4  பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது, 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க