திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்காலை - அப்டேட் ஆகும் கின்னஸ் சாதனை | Truvandram Attukal bahavathi Amman temple

வெளியிடப்பட்ட நேரம்: 23:18 (08/02/2019)

கடைசி தொடர்பு:23:20 (08/02/2019)

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்காலை - அப்டேட் ஆகும் கின்னஸ் சாதனை

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா, வரும் 20-ம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு, பழைய கின்னஸ் ரெக்கார்டை முறியடிக்கும் விதமாக கின்னஸ் சாதனை அப்டேட் செய்யப்பட உள்ளது.

ஆற்றுக்கால்

'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா, வரும் 20-ம் தேதி நடக்க இருக்கிறது. இதுகுறித்து ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் டிரஸ்ட் தலைவர் வி.சந்திரசேகர பிள்ளை, பப்ளிசிட்டி கமிட்டி கண்வீனர் வி.ஷோபா ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா பிப்ரவரி 12 தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது.

பேட்டி

பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பொங்காலை, பிப்ரவரி 20-ம் தேதி காலை 10.15 மணிக்கு பொங்கல் விழாவுக்காக முதலில் பண்டார அடுப்பு பற்றவைக்கப்படும். அன்று பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நைவேத்யம் நடக்கிறது. மறுநாள், தேவி கோயிலில் எழுந்தருளல் நடக்கிறது. பொங்காலை விழாவிற்காக கோயிலைச் சுற்றி கூடுதல் இடங்களைச் சுத்தப்படுத்தியுள்ளோம். இதற்கு முன்பு, 1997-ம் ஆண்டு பிப்ரவரி    23-ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்துகொண்டது முதன்முறையாக கின்னஸில் இடம்பெற்றது.

​​பொங்காலை

2009-ம் ஆண்டு, 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்தது. கடந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டும் கின்னஸ் குழு வருகிறது. இந்த ஆண்டு பழைய கின்னஸ் ரெக்கார்டை முறியடிக்கும் விதமாக கின்னஸ் சாதனை அப்டேட் செய்யப்பட உள்ளது. கோயில் பிரசாதத்திற்காக உணவு பாதுகாப்புச் சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். தனியார் சார்பில் நடத்தப்படும் அன்னதானங்களும் கண்காணிக்கப்படும்" என்றனர்.