``நான் ஏதாவது உளறிவிடுவேன்... வேண்டவே வேண்டாம்... " - சோழிங்க நல்லூர் தாசில்தார் நிர்மலா | Tasildhar Nirmala reinstated in the same place...

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (08/02/2019)

``நான் ஏதாவது உளறிவிடுவேன்... வேண்டவே வேண்டாம்... " - சோழிங்க நல்லூர் தாசில்தார் நிர்மலா

சோழிங்நல்லூரில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சிய லாரிகளைப் பிடித்த தாசில்தார் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

 நிர்மலா தாசில்தார்

 

சோழிங்கநல்லூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதாக வந்த புகாரையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் தாசில்தார் நிர்மலா. இதில் இரண்டு லாரிகளை தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த போது அந்தப் பகுதிக்கே சென்று பிடித்து சிறைவைத்தார். நிர்மலாவின் இந்த நடவடிக்கையை அடுத்து `டேங்கர்ஸ் லாரிகள் அசோஷியேஷன்; சார்பில் போராட்டம் நடத்தினர். மேலும் சென்னை மாவட்ட ஆட்சியரிடமும் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாசில்தாரை அழைத்து அந்த லாரிகளை விடுவிக்குமாறு மாவட்ட ஆட்சியர்  கூறியதாகத் தெரிகிறது. அதோடு நிர்மலாவை மெட்ரோ ரயில் பிரிவுக்கு இடமாற்றம் ( land acquisition) செய்துள்ளார். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை தாசில்தார் விடுவித்துள்ளார். நிர்மலாவுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு குரல் திரட்டி வந்தனர். இந்த நிலையில் அவர் மீண்டும் சோழிங்கநல்லூர் தாசில்தாராக  மாற்றப்பட்டுள்ளார். 

அது குறித்து அவரிடம் பேசியபோது, சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு லாரிகளும் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்டது அல்ல என்று கூறினார்கள். அதனால் அந்த லாரிகளை விடுவித்துவிட்டேன். இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள். நான் ஏதாவது உளறிவிடுவேன். வேண்டவே வேண்டாம் என நிறுத்திக்கொண்டார். நடுங்கி கொண்டேபேசிய தாசில்தாரின் பதிலைக் கேட்டபோது அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.