நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை! - அறிவு ஜீவிகள் கைதைக் கண்டித்து மதுரையில் போராட்டம் | PUCL demonstration at Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (09/02/2019)

கடைசி தொடர்பு:05:00 (09/02/2019)

நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை! - அறிவு ஜீவிகள் கைதைக் கண்டித்து மதுரையில் போராட்டம்

பீமா கோரேகான் சம்பவத்தில் தொடர்பு படுத்தி  முக்கிய அறிவு ஜீவிகளை, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்வது உட்பட,  நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாகக் கூறி வாயில் கறுப்புத்துணி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வு மதுரையில் இன்று மாலை நடந்தது.

பீமாகரோன் போராட்டம்

பி.யூ.சி.எல் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு பற்றி கூறிய நிர்வாகிகள், "மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் சம்பவத்தை தொடர்ந்து 'உபா' போன்ற கொடுமையான  சட்டத்தின் கீழ், நாட்டின் முக்கிய அறிவு ஜீவிகளை, சமூக செயற்பாட்டாளர்களை மத்திய அரசின் அழுத்தத்தால் மகாராஷ்டிர அரசு கைது செய்து சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்தும், கருத்துச் சுதந்திரத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த அடையாள போராட்டத்தை நடத்துகிறோம்" என்றார்.

மதுரை கே.கே.நகரில் உள்ள நீதியரசர் கிருஷ்ணய்யர் அரங்கத்தின் முன்பு அமர்ந்து, கையில் ஒரு அட்டையுடனும், வாயில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டும் அடையாள எதிர்ப்பு போராட்டத்தை  நடத்தினார்கள். வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் அரங்கத்தினுள் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க