`தட்டி எடுக்கப்பட்ட தூசி!'- தமிழக பட்ஜெட் குறித்து கமல் கருத்து | Kamal Hassan comment on tamil nadu budget

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (09/02/2019)

`தட்டி எடுக்கப்பட்ட தூசி!'- தமிழக பட்ஜெட் குறித்து கமல் கருத்து

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பட்ஜெட் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

கமல்

விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், மின்சார பேருந்து இயக்கம், அப்துல்கலாம் பெயரில் கல்லூரி போன்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. தமிழக அரசின் இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ தமிழக பட்ஜெட் 2019-20 நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிறிய ஆய்வுக்குப் பிறகு மக்கள் நீதி மய்ய கருத்து’ எனக் குறிப்பிட்டு அதனுடன் ’ இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். விவசாயிகள், இளைஞர்கள் மீனவர்களுக்குச் சிறப்பான வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை. சென்ற வருடத் திட்டமே தூசு தட்டி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதுபோல் தோற்றமளிக்கிறது’  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.