`விபத்துகளைத் தடுக்க தாம்பரம் - செங்கல்பட்டு இடையே தானியங்கி சென்சார் கேமரா!’ - அமைச்சர் தகவல் | Automatic sensor cameras to be installed between chengalpattu and tambaram to avoid accidents, says Minister MR Vijayabhaskar

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (10/02/2019)

கடைசி தொடர்பு:02:00 (10/02/2019)

`விபத்துகளைத் தடுக்க தாம்பரம் - செங்கல்பட்டு இடையே தானியங்கி சென்சார் கேமரா!’ - அமைச்சர் தகவல்

        அந்த நிகழ்ச்சி

 "அதிவேகம் மற்றும் விதிகளை மீறும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் செங்கல்பட்டு டு திருச்சி வரை தானியங்கி சென்சார் கேமராக்கள் அமைக்கப்பட இருக்கிறது" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து, பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான விழிப்பு உணர்வு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கரூரில் உள்ள தனியார் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ``தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான சேவல் சண்டைப் போட்டி கரூர் மாவட்டத்தில் வரும் 16,17 மற்றும் 18 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறும். கடந்த நான்கு ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் சேவல் போட்டி நடத்த தடை விதித்திருந்தது நீதிமன்றம். பாரம்பர்ய விளையாட்டு மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தை அணுகி இந்த உத்தரவை பெற்றுள்ளோம். தமிழகத்தில் சாலை விபத்துக்கள் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதிவேகம் மற்றும் சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க, தானியங்கி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த சென்சார் கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது. 

அந்த நிகழ்ச்சி 2

இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். உலகம் வெப்பமயமாதல்,காற்று மாசுபடுதல் ஆகியவற்றைத் தடுப்பது சம்பந்தமாக தமிழகத்தில் விரைவில் பேட்டரியில் இயங்ககூடிய 14,000 புதிய பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளது. குறைந்த அளவு மாசு வெளிப்படுத்தும் பி.எஸ்- 6 தரத்தில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

இதேபோல, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் டீசல் செலவை குறைத்து,சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சி 40 என்ற அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எனவே,ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன்,ரூ.5,890 கோடி செலவில் பிஎஸ்-6 தரப்பில் 12 ஆயிரம் புதிய பேருந்துகளும்,2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும். இத்திட்டத்தின் முதல்கட்டத்தில் 500 மின்சாரப் பேருந்துகள் சென்னை,கோவை,மதுரை ஆகிய இடங்களில் இயக்கப்படும்" என்றார்.