`வட ராமேஸ்வரம்' ராமநாதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு | Arcot Ramanatheswarar temple Kumbhabhishekham

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:07:30 (11/02/2019)

`வட ராமேஸ்வரம்' ராமநாதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆற்காடு அருகே வட ராமேஸ்வரம் என்று பிரசித்திபெற்ற ராமநாதேஸ்வரர் சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதேஸ்வரர் சிவன் கோயில்

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை சொறையூர் கிராமத்தில், மிகத் தொன்மையான அகிலாண்டேஸ்வரி சமேத ராமநாதேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இத்திருத்தலம் ‘வட ராமேஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவ பெருமானை மனமுருகி வேண்டினால், ராமேஸ்வர தரிசனத்தை பெறலாம். சகல சௌபாக்கிய புண்ணியத்தைப் பெறலாம் என்பது ஐதீகம். இவ்வளவு பிரசித்தி பெற்ற, இக்கோயில் புனரமைக்கப்பட்டு 10-ம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ராமநாதேஸ்வரர் சிவன் கோயில்

வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திமிரி ஒன்றியச் செயலாளர் சொறையூர் குமார், கோயில் தர்மகர்த்தா சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் கமலக்கண்ணன், ராமன் மற்றும் சொறையூர், மாம்பாக்கம், புதுப்பாக்கம், பொன்னம்பலம் உட்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.