கோலாகலமாக நடந்தது சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்! | Saneeswara Bhagavan The temple of the Saneeswara Bhagavan, the Kumbabhishekam

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (11/02/2019)

கடைசி தொடர்பு:13:20 (11/02/2019)

கோலாகலமாக நடந்தது சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்!

Saneeswara Bhagavan

உலகப் பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.22 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

 சனீஸ்வர பகவான்

1996-ம் ஆண்டுக்குப் பிறகு இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்காக 1 கோடி ரூபாய் செலவில் இக்கோயில் சீரமைக்கப்பட்டது. சோழர் காலத்து கோயில் என்பதால் பழைமை மாறாமல் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி  கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜைகளை 150-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு செய்தனர். இன்று யாகசாலையில் 8-ம் காலபூஜை முடிவுற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது. 

வேத மந்திரங்கள் முழங்க, மங்கள ஓசை ஒலிக்க காலை 9.22 மணிக்கு ராஜகோபுரம், தர்பாரண்யேஸ்வரர், தியாராஜர், சனீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் கோயிலின் நுழைவாயிலில் உள்ள மூன்று கோபுரங்கள் அனைத்திலும் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இவ்விழாவில் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். தள்ளாத வயதிலும் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தில்  பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் ஸ்பிரேயர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. எவ்வித சிறு அசம்பாவிதமின்றி விழா இனிதே முடிந்தது.

படங்கள்: பா.பிரசன்னா