`8 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்கள்' - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! | Members of the Lok Ayuktha group should be appointed within 8 weeks says supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (11/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (11/02/2019)

`8 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்கள்' - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு

ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் அவர்களை விசாரணை செய்யும் விதமாகக் கொண்டுவரப்பட்டது தான் லோக் ஆயுக்தா. 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த இந்தச் சட்டம் தமிழக சட்டசபையில் கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் முறையாக லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் இதுவரை அமைக்கவில்லை. தொடர்ந்து இந்த விவகாரத்தில் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பல முறை தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

உச்ச நீதிமன்றம்

அப்போது தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``லோக் ஆயுக்தா பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இன்னும் உறுப்பினர்கள் நியமனம் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே, கூடுதல் அவகாசம் வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் இன்னும் 8 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்து அதற்கு அடுத்த நான்கு வாரங்களுக்குள் அவர்களை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க