`சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை!’ - தமிழக அரசு | chinnathambi elephant Shut down in the camp says tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (11/02/2019)

கடைசி தொடர்பு:18:14 (11/02/2019)

`சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை!’ - தமிழக அரசு

சின்னத்தம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர, வேறு வழியில்லை எனத் தமிழக வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்ற தடை கோரியும் அதைப் பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரிய வழக்குகள் சென்னை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரனை வந்தது. அப்போது நீதிபதிகள், ``பத்திரிகை செய்திகளைப் பார்க்கும்போது சின்னத்தம்பி யானை கடந்த சில நாள்களாகக் காட்டு யானைபோல் செயல்படவில்லை’’ எனத் தெரிவித்தனர். அதே சமயம் பயிர்களுக்கு பாதிப்பும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சின்னதம்பி

நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவாத்சவா, ``யானையைக் காட்டுக்கு அனுப்ப முயன்றும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுகிறது. மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி யானையைப் பிடித்து முகாமில் பாதுகாத்து பாரமரிக்க இருக்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை வழக்கை மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.