சுற்றுலாத்தலமாக மாறிய சென்னை மெட்ரோ! - குவிந்த பொதுமக்கள் | chennai metro first phase completed

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (11/02/2019)

கடைசி தொடர்பு:22:49 (11/02/2019)

சுற்றுலாத்தலமாக மாறிய சென்னை மெட்ரோ! - குவிந்த பொதுமக்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது சென்னை மெட்ரோ. இரண்டு வழித்தடங்களைக் கொண்ட சென்னை மெட்ரோவின் முதல்கட்ட பணியானது 45 கி.மீ தொலைவுக்கு 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் என முழுவதும் நிறைவடைந்து கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததுள்ளது.

மெட்ரோ

வண்ணாரப்பேட்டையிலிருந்து ஏ.ஜி-டி.எம்.எஸ் வரையிலான மெட்ரோ வழித்தடத்தைத் திருப்பூரிலிருந்து காணொலிக்காட்சிகளின் மூலம் பிரதமர் மோடி  திறந்து வைத்தார். இந்நிலையில் பிப்ரவரி 10,11 ஆகிய தினங்களுக்கு மெட்ரோ ரயில் இலவசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். வார விடுமுறையான நேற்று அதிகப்படியான மக்கள் ஆர்வத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

சென்னை மெட்ரோ

இந்நிலையில், இன்று திங்கள்கிழமையாக இருந்தபோதும் எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களும் நெரிசல் நிறைந்து காணப்பட்டன. பலரும் ஆர்வத்துடன் குடும்பமாக சுற்றுலா செல்வதுபோல மெட்ரோ ரயிலில் தங்களின் முதல் பயணத்தை மேற்கொண்டனர். இதுகுறித்து சென்னை மெட்ரோவைச் சார்ந்த அதிகாரிகளிடம் பேசுகையில், “மெட்ரோவை பொது மக்களிடம் கொண்டு செல்வதற்காகத்தான். இந்த இரண்டு நாள்கள் இலவச சேவைகளை வழங்குகின்றோம் எப்போதும் வாரநாள்களில் ஒரு நாளைக்கு 60,000 மக்கள் பயணிப்பார்கள், வார விடுமுறைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் மெட்ரோ சேவையைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்றனர்.