சௌந்தர்யா - விசாகன் திருமண பார்ட்டி - தொழிலதிபர்கள்... பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! | rajini daughter marriage party held in leela palace

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (11/02/2019)

கடைசி தொடர்பு:07:13 (12/02/2019)

சௌந்தர்யா - விசாகன் திருமண பார்ட்டி - தொழிலதிபர்கள்... பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ரஜினி மகள் சௌந்தர்யா - விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து இரவு, நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சௌந்தர்யா

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்துக்கான கொண்டாட்டங்கள் கடந்த சிலநாள்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கிவிட்டது. தனக்கு நெருங்கியவர்களுக்கு, ரஜினியே நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அழகிரி, திருநாவுக்கரசர், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் மணமக்களை வாழ்த்தியுள்ளளார். இந்த நிலையில், சௌந்தர்யா - விசாகன் சார்பில் இரவு பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லீலா பேலஸில் நடைபெறும் இந்த பார்ட்டிக்கு அனில் அம்பானி வருகை தந்துள்ளார். நட்சத்திர ஹோட்டலில் ஹெலிகாப்டர் தரையிரங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல பாலிவுட் நடிகர்களும் தொழிலதிபர்களும் இந்த பார்ட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.